நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும்.

விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயண ஆலோசனை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருப்பதால், ஈரான், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்க வேண்டும்.

மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு மற்றும் பயண நிலைமையின் நிச்சயமற்ற தன்மையை விஸ்மா புத்ரா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேசிய தூதரக பணிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

மலேசியர்களின் பாதுகாப்பு,  நலன் அமைச்சகத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

அதன்படி, மார்ச் 4 முதல் 8 வரை ஜெட்டா, மதீனாவிற்கும் மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்திற்கும் மீண்டும் சேவையைத் தொடங்குவது குறித்து ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பை அது கவனத்தில் கொண்டுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவ மலேசிய தூதரக பணிக் குழு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் செயல்பாட்டு கூட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை விமானப் போக்குவரத்து இடையூறுகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுடன், குறிப்பாக அவர்களின் அடுத்த பயணத்திற்காகக் காத்திருக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன.

மேலும் சவூதி அரேபியாவில், ஜெட்டாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம்  பயண இடையூறால் பாதிக்கப்பட்ட மலேசிய உம்ரா யாத்ரீகர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset