நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எட்டு மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்

கோலாலம்பூர்: 

செராஸ் பகுதியில் உள்ள தாமான் மீடா மேம்பால நகர ரயில் நிலையத்தின் உயரமான பகுதியில் சிக்கியிருந்த நபர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.

காணொளியில், கருப்பு குறுநீள உடை அணிந்த நபர் குறுகிய விளிம்பில் நடந்து கொண்டிருந்தார். பின்னர் சுமார் எட்டு மீட்டர் உயரத்தில் சுவரை ஒட்டி நின்றபடி ஒரு கம்பியை ஒரு கையால் பற்றிக்கொண்டிருந்தார். அவர் தவறினால் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் நிலவியது.

இந்நிலையில், இரு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவரை பற்றிக் காப்பாற்றினர். மேலும் சிலர் இணைந்து அந்த நபரை பாதுகாப்பாக கீழிறக்கினர்.

மீட்பு வெற்றியடைந்ததும் அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று, தீயணைப்பு வீரர்களின் துரிதமும் தொழில்முறையும் பாராட்டப்பட்டு வருகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset