செய்திகள் மலேசியா
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
பொங்கல் விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
இப்பொங்கல் விழா நாளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பத்துமலை, கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் கொண்டாடப்படும்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் அனைத்து ஆலயங்களின் பொங்கல் வைக்கப்படும். அதே வேளையில் பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா வரும் ஜனவரி 17ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை வரை பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மஹிமாவுடன் இணைந்து பொங்கல் வைக்கப்படவுள்ளது.
அதன்பின் கோலாட்டம், மயிலாட்டம், உறுமிமேளம், நாதஸ்வரம், பரதம், புலியாட்டம் உட்பட பல பாரம்பரிய நடன நிகழ்வுகள் நடைபெறும்.
அதே வேளையில் பூக் கட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல், உறி அடித்தல், தோரணம் பின்னுதல் போட்டிகளும் நடத்தப்படும்.
ஆக மொத்தத்தில் இந்த ஒற்றுமை பொங்கல் விழா பாரம்பரியத்துடனும் கலாச்சாரத்துடனும் நடத்தப்படும்.
எனவே பொதுமக்கள் திரளாக வந்து இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
