நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது

கோலாலம்பூர்:

தொழுகைக்கூடம், வசதியான உறங்மிடங்கள், மின்சாரம், நீர் வசதி உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் இயங்கிய சட்டவிரோத வெளிநாட்டு குடியிருப்பு ஒன்று, ஜாலான் கிளாங் லாமா அருகிலுள்ள பந்தாய் பாரு பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குடியிருப்பு இன்று அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையால் சோதனை செய்யப்பட்டது.

அங்கு வசித்து வந்த ஹெர்மன் (30 வயது), கடந்த ஓர் ஆண்டாக மனைவியுடனும் குழந்தையுடனும் தங்கி வருவதாகவும், மாதம் 350 ரிங்கிட் வாடகை செலுத்துவதாகவும் கூறினார். இதுவரை எந்தச் சோதனையும் நடந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

சோதனையில், குறுகிய வழித்தடங்களுடன் இணைக்கப்பட்ட சமையலறை, கழிப்பறை, வரவேற்பறை என குறைந்தது ஐந்து அறைகள் கொண்ட ஒழுங்கமைந்த கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு வார கால ரகசிய தகவல்களின் அடிப்படையில், அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அதிகாரிகள் வந்ததும் அனைத்து  வெளிநாட்டவர்களும் அச்சத்தில் ஓடி ஒளிந்தனர்; சிலர் கூரைகளில் ஏறினர், சிலர் கதவுகள், கழிப்பறைகளின் பின்னால் மறைந்தனர், சிலர் அறைகளில் பூட்டிக் கொண்டனர்.

இதுகுறித்து குடிவரவு துறை துணை தலைமை இயக்குநர்  டத்தோ லுக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், இந்த நடவடிக்கையில் 37 ஆண்கள், 34 பெண்கள் என மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் 66 பேர், மியான்மார்  3 பேர், இந்தியா 1, பாகிஸ்தான் 1 நாட்டு குடிமக்கள் உள்ளனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி மலேசியாவில் தங்கி இருப்பதுடன், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு சட்டம் பிரிவு 15(1)(c) , 6(1)(c) கீழ் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset