நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்

கோலாலம்பூர்:

2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலேசிய சுற்றுலா துறையின் தலைவர் டத்தோ மனோகரன் பெரியசாமி இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு மலேசியா சுற்றுலா வருகை ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் சுற்றுலா அமைச்சும் சுற்றுலாத் துறையும் பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு எஸ்எம்எஸ் டீன் ஜுவலர்ஸ் பிரத்தியேக தங்க நாணயத்தை அறிமுகம்  அறிமுகம் செய்துள்ளது.

இந்த தங்க நாணயம் சுற்றுலா வருகை ஆண்டின் ஓர் அடையாளமாக இருக்கும்.

அதே வேளையில் மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தங்க நாணயத்தை ஓர் நினைவுப் பொருளாக வாங்கிச் செல்லலாம்.

ஆக எஸ்எம்எஸ் டீம் ஜூவலர்ஸின் முயற்சி ஒரு மகத்தானது என்று டத்தோ மனோகரன் கூறினார்.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட 1.4 மில்லியன் இந்திய சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர்.

கடந்தாண்டுகளை போலவே இந்த 2026 சுற்றுலா ஆண்டிலும்  மலேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் மலேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுப் பயணிகள் கண்டிப்பாக ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வர வேண்டும்.

நகைகள் உட்பட பொருட்கள் வாங்குவதற்கு ஜாலான் மஸ்ஜித் இந்தியா முக்கிய இடமாக இருக்கும் என்று டத்தோ மனோகரன் பெரியசாமி  கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset