நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்

கூச்சிங்:

தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

கூச்சிங் ஸ்ரீ அமானின் ஜாலான் பிரயூனில் உள்ள தாமான் முதியாராவில் உள்ள ஒரு வீட்டில் இன்று கணவன், மனைவி இருவர் உடல்களில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஸ்ரீ அமானின் லுபோக் அந்துவில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். அவரது மனைவி தாதியராக உள்ளார் என அறியப்படுகிறது.

இருவரும் அறையை விட்டு வெளியே வராததைக் கவனித்த அவர்களின் மகன், அவர்களின் உடல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

காலை 6.55 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் தம்பதியினர் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக சரவா மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் ஸ்ரீ அமான் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் பணியாளர்கள் குழுவும், ஸ்ரீ அமான் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

முதல்கட்ட பரிசோதனையில் பாதிக்கப்பட்ட 45 வயது ஆணும் அவரது மனைவியும், 44 வயதுடைய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன்கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset