நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட  மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு

கோலாலம்பூர்: 

கடந்த வியாழக்கிழமை அன்று மூன்று மாதங்களான ஆண் குழந்தையின் பெற்றோர்,  சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அக்குழந்தையின் காலெலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கு முன், அந்த குழந்தை தாமன் கோபராசி போலிஸ் பகுதியில் உள்ள ஒரு பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தது. பின்னர் பெற்றோர் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றபோது, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததை கவனித்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், குழந்தையின் இடது தொடை எலும்பு முறிந்திருப்பது உறுதியாகி, இதனைத் தொடர்ந்து போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் இடது தொடைப் பகுதியில் வீக்கம் இருப்பதை கண்டறிந்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு போலீஸ் புகார் பெறப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

“அம்பாங் மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயதுடைய மருத்துவர், குழந்தையின் இடது தொடை எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் போலீஸ் புகார் அளித்துள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் (Akta Kanak-kanak 2001) பிரிவு 31(1)(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஃபாடில் கூறினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset