நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க நாணயம் அறிமுகம் செய்தது

கோலாலம்பூர்:

2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லர்ஸ் இன்று தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தியது.

மலேசிய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு மலேசிய சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலேசிய சுற்றுலா துறை வாரியத்தின் விடியோ விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லர்ஸ் தங்க நாணயம் அறிமுக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மலேசிய சுற்றுலா துறை தலைவர் 
டத்தோ மனோகரன் பெரியசாமி இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லர்ஸ் தங்க நாணயத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லர்ஸ் தலைமை செயல் முறை அதிகாரி முஹம்மத் சைஃபுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வில் சுற்றுலா அமைச்சின் தலைமை இயக்குநர் முகமத் அமிரூல்,  எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் டத்தோ முஹம்மத் சீராஜூடின், ஹாஜி ரஃபீக் தீன், மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், கிரீன் பேக்கேட் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமித் தாவூத், டத்தோ ஹிஷாமுத்தீன் டான் ஸ்ரீ உபைதுல்லா, டத்தோ கொப்பத்தா இப்ராஹிம், டத்தோஸ்ரீ அக்மல், டான் ஸ்ரீ ஹுசைன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset