நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி ஆட்சியாளர் சுல்தான் முஹ்ரிசின் 78-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி-பெர்துவான் பெசார் துவான்கு முஹ்ரிஸ் துவான்கு முனாவீர் அவர்களின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், சுல்தான் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் நல்ல உடல்நலம், வளம், நீடித்த நலனுடன் அல்லாஹ் (SWT) வின் பாதுகாப்பையும் பெற வேண்டும் என்றும், சிறந்த முறையில் மாநிலத்தை வழிநடத்தி பாதுகாக்க தொடர்ந்து அருள் வழங்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்பதாகப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

“அவரது அரசாட்சிக்கு இறைவன் அருள் பாலிப்பான் தௌலத் துவான்கு,” என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

நெகிரி செம்பிலான் சுல்தானின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற மாநில விருதுகள், மரியாதைகள் வழங்கும் விழாவில், துங்கு கெச்சில் மூடா துங்கு டத்தோ மஹ்மூத் ஃபவ்ஸி துங்கு முஹியிதின் தலைமையில் 532 பேர் விருது பெறுநர்களாகப் பட்டியலிடப்பட்டனர். இதில் அவருக்கு 'Darjah Seri Setia Tuanku Muhriz Yang Amat டெர்பிலங்' விருது வழங்கப்பட்டது.

இந்த விழா இஸ்தானா பெசார் ஸ்ரீ மேனாந்தியில் உள்ள பலாய்ருங் ஸ்ரீ அரங்கில் நடைபெற்றது. முதல் அமர்வு இன்று நடைபெற்றது; இரண்டாம் அமர்வு ஜனவரி 20-ஆம் தேதியும், மூன்றாம் அமர்வு ஜனவரி 27-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset