நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முர்ரே ஹண்டர் MCMCயிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர்:

அரசியல் ஆய்வாளர் முர்ரே ஹண்டர் எம்சிஎம்சி பற்றிய தொடர் கட்டுரைகளை வெளியிட்டமைக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, அவற்றைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இன்று தனது சப்ஸ்டாக்க்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹண்டர் மன்னிப்பு, திரும்பப் பெறுதல் நாட்டின் இணைய ஒழுங்குமுறை நிறுவனத்துடனான தீர்வுக்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்.

எம்சிஎம்சி, அதன் துணை நிறுவனங்கள் பற்றிய எனது கருத்துகள், கட்டுரைகள் தவறானவை மட்டுமல்ல தவறாக வழிநடத்துபவை என்று விளக்கப்படலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

எனவே இதுபோன்ற செயல்கள் எம்சிஎம்சி அல்லது அதன் தொடர்புடைய தரப்பினருக்கு ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தினால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், வருந்துகிறேன்.

மேலும் இதுபோன்ற அனைத்து கருத்துகளையும் கட்டுரைகளையும் முழுவதுமாக இதன்மூலம் திரும்பப் பெறுகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset