செய்திகள் வணிகம்
Absolute பஜார் X பெஸ்டிவல் காயா ராயா 2026: 5ஆம் ஆண்டில் புதிய சாதனைகளை நோக்கிய பிரம்மாண்டப் பயணம்
கோலாலம்பூர்:
மலேசியாவின் புகழ்பெற்ற ராயா விழாவான Absolut Bazaar X Festival Gaya Raya (ABxFGR) ஐந்தாவது ஆண்டாக 2026-இல் மிகப் பெரிய அளவில் மீண்டும் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு மலேசிய சாதனை புத்தகத்தில் (The Malaysian Book of Records) நாட்டின் மிகப்பெரிய ரமடான் பஜாராக அங்கீகரிக்கப்பட்ட இந்த விழா, 'My Events International', 'Absolute Events & Management' ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டில் முதன்முறையாக, ABxFGR மூன்று முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது. முதல் சர்வதேச நிகழ்வாக புருனையின் BRIDEX மாநாட்டு மையத்தில் 27 பிப்ரவரி 2026 முதல் 1 மார்ச் 2026 வரை நடைபெறும். அதன் பின்னர் பினாங்கில் உள்ள PICCA-வில் 6 முதல் 8 மார்ச் 2026 வரை நடைபெறும். இறுதிக் கட்ட நிகழ்வு, கோலாலம்பூரில் உள்ள MITEC-ல் 13 முதல் 16 மார்ச் 2026 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
MITEC-ல் நடைபெறும் இறுதிக் கட்ட விழா, 13 மார்ச் 2026 மதியம் 12 மணி முதல் 16 மார்ச் 2026 காலை 6 மணி வரை, 66 மணி நேரம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்த ரமடான் பஜாரானது மலேசியாவின் முக்கிய ராயா விழாவாக நிலைநிறுத்தியுள்ளதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் பெரும் ஆதரவாக விளங்குகிறது என்று 'My Events International' நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான டத்தின் வீரா சப்ரீனா தெரிவித்துள்ளார்.
மேலும், ABxFGR 2026 நிகழ்வு புருனை, பினாங்கு அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் MITEC, KL இல் நடைபெறும் உச்சக்கட்ட நிகழ்வில் கூடுதல் கண்காட்சி இடங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன. எனவே, இந்த ஆண்டு சர்வதேச அளவிலும் வடக்கு மலேசியாவில் புதிய சந்தைகளை ஊடுருவச் செய்யும் எங்கள் கனவை நனவாக்குவதில் ஏற்பாட்டாளர்களின் ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்," என்று அப்சலூட் நிகழ்வுகள், மேலாண்மையின் நிர்வாக இயக்குநர் திரு. நூர் அலி நட்ஸ்வான் கூறினார்.
ABxFGR 2026-இல் இவ்வாண்டு புதிய முயற்சியாக 'SPayLater' மூலம் 'Buy Now, Pay Later' கட்டண வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பார்வையாளர்கள் எளிதாகவும் சிரமமின்றியும் வாங்கும் அனுபவத்தை பெற முடியும்.
மேலும், புருனையில் 'Grab The Gold', கோலாலம்பூரில் 'Human Claw Machine' (Cengkaman Lebaran), பினாங்கில் 'Money Chamber' போன்ற அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, 'Happy Hour' விற்பனை, பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகள், பிரபலங்கள், முன்னணி தொழில்முனைவோரின் பங்கேற்பும் விழாவை மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்ற ஆண்டுகளைப் போல் இவ்வாண்டும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ABxFGR 2026, உள்ளூர் தொழில்முனைவோரின் தயாரிப்புகள், சேவைகளை அறிமுகப்படுத்தும் முக்கிய மேடையாகவும், ராயா தயாரிப்புகளுக்கான முழுமையான வாங்கும் அனுபவமாகவும் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ABxFGR விழா அபாரமான வளர்ச்சியையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளது. இதுவரை RM61.5 மில்லியன் விற்பனை வருமானத்தை ஈட்டியுள்ள இந்த விழா, 2,432 கடை அரங்குகள், 334 உணவு, பானம் விற்பனையாளர்கள் மூலம் வணிகத்திற்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், 7.96 மில்லியன் பார்வையாளர்களின் வருகையுடன் மக்கள் ஆதரவை பெற்றுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்ட பிரபலங்கள், 125 அதிகாரப்பூர்வ ஆதரவாளர்களும் 3,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரும், 700 உள்ளூர் பிராண்டுகள் இணைந்து, ABxFGR-ஐ மலேசியாவின் முன்னணி ராயா விழாவாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
வாடிக்கையாளர்களைக் கவர உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டம்
June 8, 2026, 11:15 am
