செய்திகள் மலேசியா
மலேசிய இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்களின் சங்கத் (AIBIM) தலைவராக ரஃபி ஹனீஃப் நியமனம்
கோலாலம்பூர்:
மலேசிய இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்களின் சங்கமான (AIBIM), MBSB வங்கி பெர்ஹாட்டின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியான ரஃபி ஹனீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
AIBIMஇன் புதிய தலைவராக 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வெளியாகி உள்ளது.
ஏஐபிஐஎம், 2025–2028 காலகட்டத்திற்கான தலைவராக ரஃபி ஹனீப் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023–2025 வரை தலைவர் பதவி வகித்த டத்தோ முகமது முவஸ்ஸாம் முஹம்மது, அவர்களைத் தொடர்ந்து அவர் இந்த பொறுப்பை ஏற்கிறார்.
நிர்வாகத் திறன், தொழில்துறை அனுபவம், நிதி துறைகளில் வலுவான பின்னணியுடன் ராஃப் ஹனீஃப் வருவதாக ஏஐபிஐஎம் தெரிவித்துள்ளது.
2025–2027 வரையிலான மூன்று ஆண்டு திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தத் திட்டத்தின் கீழ் தொழில்துறை தலைமைத்துவம், மதிப்புமிக்க இடைநிலை நிதியும், மலேசியாவின் உலகளாவிய இஸ்லாமிய நிதி நிலையை வலுப்படுத்த அவர் தலைமை தாங்குவார் எனவும் ஏஐபிஐஎம் கூறியுள்ளது.
இதனிடையே, ஏஐபிஐஎம் பிற நிர்வாகப் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முன்னாள் தலைவர் முஹம்மது முவஸ்ஸாம் முஹம்மது அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 10:23 pm
தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள்: எண்ணிக்கை மீண்டும் சரிவு
January 12, 2026, 9:49 pm
பல்கலைக்கழகத்தில் ஏர்கோன்ட் கம்ப்ரசர் வெடித்ததில் ஒருவர் மரணம்: 9 பேர் காயம்
January 12, 2026, 9:45 pm
தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அந்நிய நாட்டு ஆடவர் கைது
January 12, 2026, 9:38 pm
சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் வருகை; கல்வி தேசிய முன்னுரிமை: டத்தோஸ்ரீ அன்வார்
January 12, 2026, 6:58 pm
1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது: 20,000 பேர் கைது
January 12, 2026, 5:11 pm
குழந்தைகளின் கல்வி நாட்டின் முன்னுரிமை: பிரதமர் அன்வார்
January 12, 2026, 4:56 pm
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் திருவிழா அம்பாங்கில் நடைபெறும்: பாப்பாராயுடு
January 12, 2026, 4:38 pm
12 ஆண்டுகளுக்கும் மேலாக போலி MyKad-ஐ பயன்படுத்திய இந்தோனேசிய ஆடவர் கைது
January 12, 2026, 3:28 pm
