நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகளின் கல்வி நாட்டின் முன்னுரிமை: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர் 

நாட்டின் முன்னுரிமைகளில் கல்வி தொடர்ந்தும் முக்கியத்துவம் பெறும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி முறையின் வெற்றியானது கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகளில் மட்டுமல்லாது அரசாங்கம், பெற்றோர், கல்வியாளர்கள் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பிலும் அமைய வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

 “அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது,  குழந்தைகள் பள்ளியிலும் வீட்டிலும் முழுமையான ஆதரவைப் பெற வழி வகுக்கும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதன் மூலம், அறிவும் நெறிமுறையோடும் கூடிய புதிய தலைமுறையை உருவாக்க முடியும். அவர்கள் அறைகூவல்களை எதிர்கொள்ளும் திறனுடன், நம்பிக்கையுடன் முன்னேறுவார்கள்,” என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறினார்.

முன்னதாக, தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உடன் பள்ளி தொடக்க நாள் ஆய்விற்காகச்  சுங்கை பெசி  தேசியப்பள்ளி, குவாங் ஹொன் தேசிய வகைப் சீனப்பள்ளி, சுங்கை பெசி தேசிய வகைப் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்ற அன்வார், பள்ளிகளில் வழங்கப்படும் ஆரம்ப உதவி (Bantuan Awal Persekolahan) விநியோகத்தையும் கண்காணித்தார். 

பள்ளிகளில் வழங்கப்படும் ஆரம்ப உதவியானதுப் பெற்றோர்களுக்குப் பள்ளிக்கான ஆரம்பத் தயாரிப்பை எளிதாக்கும் முக்கிய முயற்சி ஆகும் என்று அன்வார் தெரிவித்தார்.

மேலும்,  பள்ளிகளுக்குப் பயணம் செய்த போது புதிய மாணவர்களைச் சந்தித்து, அவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பும் பெற்றதாக அன்வார் கூறினார்.

“குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும் போது, ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, ஆசிரியர்கள் நம்பிக்கை, நாட்டின் எதிர்காலம் பற்றிய பெரிய கனவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பது நினைவூட்டுகிறது,” என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

“பள்ளிகள், அறிவைப் பெறும் இடமாக மட்டுமல்ல; அது நெறிமுறை, ஒழுக்கம், சுய அடையாளத்தை உருவாக்கும் ஆரம்ப நிலையாகும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். 

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset