செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் திருவிழா அம்பாங்கில் நடைபெறும்: பாப்பாராயுடு
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் திருவிழா இவ்வாண்டு அம்பாங்கில் நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் 'கித்தா சிலாங்கூர்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா வரும் ஜனவரி 17ஆம் தேதி அம்பாங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் காலை முதல் மாலை என இருவேளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
வரும் ஜனவரி 17 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, அம்பாங் ஜெயா, கம்போங் தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முதல் தைப்பொங்கல் விழா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, அம்பாங், டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருநாள் திருவிழா அதிகாரப்பூர்வ நடைபெறும்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர் என்று பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இந்த விழாவில் டத்தோ இர். இஷாம் பின் ஹாஷிம் (சிலாங்கூர் உள்கட்டமைப்பு, விவசாயத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்), முகமட் ரஃபிஸி பின் ரம்லி (பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர்), ஹாஜா ரோட்சியா பிந்தி இஸ்மாயில் (அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்), முகமட் கம்ரி, இயூ ஜியா ஹாவ், சையத் அஹமத் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மலேசிய மடானி கொள்கையின்கீழ், பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் கலாச்சாரப் பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த தைப்பொங்கல் விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 5,000 பேர் திரளாகக் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
தமிழர்களின் உன்னத விழாவாக தைப்பொங்கல் தமிழர் திருவிழா விளங்குகிறது. அந்த வகையில் இவ்வாண்டு நடைபெறும் தைப்பொங்கல் தமிழர் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம் பெறும்.
மேலும் அனைவருக்கும் வாழை இழையில் சுவையான சைவ உணவுகள் பரிமாறப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 10:23 pm
தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள்: எண்ணிக்கை மீண்டும் சரிவு
January 12, 2026, 9:49 pm
பல்கலைக்கழகத்தில் ஏர்கோன்ட் கம்ப்ரசர் வெடித்ததில் ஒருவர் மரணம்: 9 பேர் காயம்
January 12, 2026, 9:45 pm
தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அந்நிய நாட்டு ஆடவர் கைது
January 12, 2026, 9:38 pm
சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் வருகை; கல்வி தேசிய முன்னுரிமை: டத்தோஸ்ரீ அன்வார்
January 12, 2026, 6:58 pm
1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது: 20,000 பேர் கைது
January 12, 2026, 5:11 pm
குழந்தைகளின் கல்வி நாட்டின் முன்னுரிமை: பிரதமர் அன்வார்
January 12, 2026, 4:38 pm
12 ஆண்டுகளுக்கும் மேலாக போலி MyKad-ஐ பயன்படுத்திய இந்தோனேசிய ஆடவர் கைது
January 12, 2026, 3:28 pm
