நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; பெற்றோரின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: ஃபட்லினா

ஷாஆலம்:

மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்  விவகாரத்தில் பெற்றோரின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

யூபிஎஸ்ஆர், பிடி 3 மதிப்பீடு சோதனைகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன

இத்தேர்வுகளை மீண்டும் நிலைநிறுத்துவது குறித்த ஆய்வு, பெற்றோரின் கோரிக்கைகள்  கருத்துகளிலும் கவனம் செலுத்தப்படும்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மதிப்பீடுகளையும் மதிப்பீடு செய்யும் இந்த ஆய்வு, இந்த ஆண்டு முடிக்கப்பட்டு விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

நாங்கள் ஏற்கனவே ஆரம்பக் கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.

மேலும் அதை அமைச்சரவையில் மேலும் பரிசீலிப்பதற்காக முன்வைப்பதற்கு முன்பு ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வோம்.

எனவே எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset