நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 10,330 மாணவர்கள்: எண்ணிக்கை மீண்டும் சரிவு

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் உள்ள  தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் கிட்டத்தட்ட 10,330 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மலேசிய தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய கூட்டமைப்பும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம் இதனை உறுதி செய்துள்ளன.

2026ஆம் ஆண்டு பள்ளித் தவணை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளில் இணையும் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் பரவலாக இருக்கும்.

குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணையில் மொத்தம் 10,330 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளையும் காட்டிலும் இந்த எண்ணிக்கை மீண்டும் சரிந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் 11,568 மாணவர்களும் 2025ஆம் ஆண்டில் 11,021 மாணவர்களும் முதலாம் ஆண்டில் இணைந்தனர்.

ஆனால் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை மீண்டும் சரிவு கண்டுள்ளது.

இதற்கு பிறப்பு விகிதம்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இன்னமும் தேசியப் பள்ளி, சீனப் பள்ளிகளில் இணைந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த 10,330 மாணவர்களில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 3211 மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர்.

ஜொகூரில் 1840 மாணவர்களும் பேராக்கில் 1497 மாணவர்களும் நெகிரி செம்பிலானில் 1070 மாணவர்களும் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர்.

கெடாவில் 880, பினாங்கில் 743, கோலாலம்பூரில் 460, மலாக்காவில் 323, பகாங்கில் 296 மாணவர்களும் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர்.

பெர்லிஸ் மாநிலத்தில் 7 பேரும் கிளந்தானில் 3 பேரும் என ஆக குறைவான மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset