நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில்  சுவைபான போத்தல்களில் போதைப்பொருள் விற்பனை செய்த வியாபாரி கைது

கோலாலம்பூர்:

அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் சுவைபான போத்தல்களில் போதைப்பொருள் விற்பனை செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இதனை கூறினார்.

24 மணி நேரமும் இயங்கும் ஒரு கடையை கொண்டு சுவைபானங்களின் போத்தல்களில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சம்பவத்தை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

குறிப்பாக பல்வேறு  உள்ளூர் பிராண்டட் சுவைப் பான போத்தல்களில் போதைப்பொருட்களை விற்பனை செய்து அதிகாரிகளை ஏமாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி இங்குள்ள ஜாலான் கூச்சிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி என்று சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் நபரின் செயல் இது.

பயன்படுத்தப்படும் பொருளின் அளவு, தரத்தைப் பொறுத்து எம்டிஎம்ஏ கொண்ட பான போத்தல்கள் 300 ரிங்கிட் வரை விற்கப்படுகின்றன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

29 வயதான சந்தேக நபர் 832,350 ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 873 கிலோகிராம் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

ஜாலான் கூச்சிங்கில் உள்ள ஒரு காண்டோமினியத்தின் வாகன நிறுத்துமிடத்தில் மதியம் 12.55 மணியளவில் போதைப்பொருள் கடத்தல் முகவராகச் செயல்பட்ட 29 வயது உள்ளூர் நபரை நாங்கள் கைது செய்தோம்.

அதைத் தொடர்ந்து, நாங்கள் ஒரு டொயோட்டா வியோஸ் காரை சோதனை செய்தோம்.

அதில் ஏராளமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset