நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது: 20,000 பேர் கைது

கோலாலம்பூர்:

கடந்த ஆண்டு, கோலாலம்பூர் காவல் துறையினர் 1.08 மில்லியன் கிலோ போதைப்பொருள்களை கைப்பற்றி உள்ளனர். இதன் மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேலாக இருக்கும் என்பதை கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் 
கூறினார்.

இதனிடையே 20,540 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் குற்ற விசாரணை பிரிவு (JSJN) அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் பழக்கமுள்ள 498 பேருக்கு சிறையும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 77 நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், "உரிமைகள் பறிப்புச் சட்டம் 1988-இன் படி சொத்து பறிமுதல் நடவடிக்கைகளும் இவர்கள் மீது விதிக்கப்பட்டு, நிலம், வீடுகள், வாகனங்கள், பணம், நகைகளை உள்ளடக்கிய RM14 மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டன” என்று  ஃபாடில் கூறினார்.

காவல் துறைக்கு உதவும் வகையில், பொதுமக்கள் போதைப்பொருள் குற்ற விசாரணை பிரிவின் ஹாட்லைன் 012-2087222 வழியாக தகவல் அளிக்கும்படி காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset