நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு பிரதமர் வருகை; கல்வி தேசிய முன்னுரிமை: டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்:

கல்வி தேசிய முன்னுரிமை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மடானியின் கொள்கைகளுக்கு ஏற்ப, அறிவு, ஒழுக்கம், மீள்தன்மை கொண்ட எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

இதன் அடிப்படையில் கல்வி தொடர்ந்து தேசிய முன்னுரிமையாக இருக்கும்.

கல்வி முறையின் வெற்றி அரசாங்கக் கொள்கைகள், ஒதுக்கீடுகளை மட்டும் சார்ந்தது அல்ல.

மாறாக அரசாங்கம், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பையும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகள் விரிவான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கு அனைத்து தரப்பினரிடையேயும் வலுவான உறவுகள் முக்கியம்.

மதிப்புகள், மனிதநேயத்தில் வேரூன்றிய தரமான கல்வியை உறுதி செய்வதன் மூலம், அறிவு, நல்ல குணம் மற்றும் மன உறுதியுடன் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

முன்னதாக டத்தோஸ்ரீ அன்வாரும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் புதிய பள்ளி பருவத்தைத் தொடங்கிய மாணவர்களை சந்திக்கவும் வாழ்த்தவும் சுங்கைபீசி தேசியப் பள்ளி, குவாங் ஹான் சீனப்பள்ளி, சுங்கைபீசி தமிழ்ப்பள்ளிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset