நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அந்நிய நாட்டு ஆடவர் கைது

ஜொகூர்பாரு:

தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்ட  அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஜொகூர் போலிஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் அர்சாத் இதனை தெரிவித்தார்.

ஜொகூர், கூலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு வளாகத்தில் மலேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக 38 வயது அந்நிய நாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் மலேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்டதை காட்டும் ஒரு வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் போலிஸ் கண்டறிந்தது.

கூலாய் மாவட்ட போலிஸ் படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு ஆய்வு நடத்தி 38 வயது சீன நபரைக் கைது செய்தது  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset