செய்திகள் மலேசியா
அரசியல் சூழ்ச்சியா? அல்லது சாதாரண சந்திப்பா?: பாங்காக் பயணத்தின் பின்னணியை உடைக்கும் தக்கியுதீன் ஹாசன்
கோத்தா பாரு:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹிட் ஹமிடி, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் ஆகியோரைச் சந்தித்ததை மலேசிய இஸ்லாம் கட்சியின் (PAS) பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு மலேசிய இஸ்லாம் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் முழு அனுமதியுடனேயே நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பானது சில தரப்பினர் கூறுவது போல அரசாங்கத்தைக் கவிழ்க்கும் 'பாங்காக் மூவ்' போன்ற எந்தவொரு ரகசியத் திட்டமும் கொண்டிருக்கவில்லை என்றும், அது வெறும் சாதாரணக் கருத்துப் பரிமாற்றத்திற்காக மட்டுமே அமைந்தது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது எதேச்சையாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதில் முறையான அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மலாய், இஸ்லாமியக் கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்துப் பேசுவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இச்சம்பவம் குறித்து கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய தக்கியுடின் ஹாசன், தன் மீதான குற்றச்சாட்டுகள் வெறும் ஊகங்கள் மட்டுமே என்றும், கட்சித் தலைவருக்குத் தெரியாமல் எந்தவொரு ரகசிய நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 1:17 pm
மிரட்டல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜம்ரி வினோத்தை அழைக்க போலிசார் திட்டமிட்டுள்ளனர்
March 12, 2026, 1:15 pm
தொழிலாளர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்: டத்தோஸ்ரீ ரமணன்
March 12, 2026, 12:23 pm
அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாக நிஸாமுடின் ஹமீத் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
March 12, 2026, 12:04 pm
அனுதாபத்தை அறுவடை செய்யும் வெளிநாட்டவர்கள்: கோலாலம்பூர் சுற்றுலாத் தலங்களில் போலி அகதிகள்
March 12, 2026, 11:18 am
பொறாமை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது
March 12, 2026, 11:01 am
