நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்கோ சத்தியா நலமாக உள்ளார்; துணைப் பிரதமர் சார்பில் அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது: அர்விந்த் அப்பளசாமி

அம்பாங்:

அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  முத்தசத்தியா துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்.

துணைப் பிரதமரின் இந்தியர் விவாகாரப் பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

தமிழ், மலாய் என இரு மொழிகளிலும் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர் சத்தியா.
குறிப்பாக நகைச்சுவையில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இன்று வரை இல்லை.

இந்நிலையில் சத்தியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு அவரின் ஒரு காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் வாயிலாக நீக்கப்பட்டது. 

தற்போது அதே காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அக்காலின் தொடைப் பகுதி வரை  தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் அவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் உள்ளார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி சார்பில் அவரை நான் சந்தித்தேன்.

அதே வேளையில் அவருக்கு 10,000 ரிங்கிட் நிதியுதவியும் துணைப் பிரதமர் சார்பில் வழங்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் இல்லம் திரும்ப ஒட்டுமொத்த மலேசியர்களும் இறைவனை பிரார்த்தனை செய்யுமாறு அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

இந்நிலையில் அம்பாங் மருத்துவமனையில் இயக்குநர் டாக்டர் கஸ்வாடி, பிரபல சமூக சேவையாளர் சிஆர் கார்த்திக், கலைஞரும் சத்தியாவின் குடும்ப உறுப்பினருமான ஜெகன் ஆகியோரும் சத்தியாவை இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset