செய்திகள் மலேசியா
புனித மாதத்தில் அதிரடிச் சோதனை: 'பேச்சலர்' என்று பொய் சொல்லி சிக்கிய திருமணமான நபர் இன்னொரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கி இருந்தபோது சிக்கினார்
மலாக்கா:
மலாக்கா மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறை (JAIM) அதிகாரிகள் இன்று அதிகாலை ஒரு தங்கும் விடுதியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு தங்கியிருந்த ஒரு ஜோடியைப் பிடித்து விசாரணை செய்தபோது, தாங்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்றும், தான் ஏற்கனவே விவாகரத்தானவர் என்றும் அந்த நபர் அதிகாரிகளிடம் பொய் கூறியுள்ளார்.
இருப்பினும், அதிகாரிகளின் தீவிர விசாரணையில் அந்த நபர் மறைத்த உண்மைகள் அம்பலமாகின. அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தற்போது வரை ஒரு பெண்ணின் கணவராக இருப்பதும் சோதனையில் தெரியவந்தது.
முறையான திருமண உறவு ஏதுமின்றி ஒன்றாகத் தங்கியிருந்ததற்காக, மலாக்கா மாநில ஷரியா சட்டத்தின் கீழ் அந்த ஜோடி கைது செய்யப்பட்டது. முறையற்ற உறவு, சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக இருவரும் தற்போது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 3:59 pm
இளைஞர்களுக்கான ‘உணவு உற்பத்தி தோட்டத் திட்ட முயற்சி’: அமைச்சர் டத்தோ சான் ஃபூங் அறிவிப்பு
March 12, 2026, 3:58 pm
கெடாவில் 62 கிலோ 'ஷாபு' பறிமுதல்: போலிசாரிடம் சிக்கிய கடத்தல் கும்பல்
March 12, 2026, 3:56 pm
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
March 12, 2026, 3:21 pm
ஸ்பெயின் நாட்டவரைக் கடத்தியதாக இரண்டு சந்தேக நபர்கள் கைது
March 12, 2026, 1:17 pm
மிரட்டல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு உதவ ஜம்ரி வினோத்தை அழைக்க போலிசார் திட்டமிட்டுள்ளனர்
March 12, 2026, 1:15 pm
