நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பா வாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

தாப்பா மக்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

தாப்பா மக்கள் பல்வேறு உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றதால் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

புல் வெட்டும் இயந்திரங்கள், மரங்களில் வெட்டும் சங்கிலி ரம்பங்கள், புல் வெட்டும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டவற்றில் அடங்கும்.

இவை அனைத்தும் வேலையை எளிதாக்கும். இது மக்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்கும்.

இந்த உதவிப் பொருட்களை பெற்றவர்களில் விவசாயிகள், வியாபாரிகள், மசூதி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், கோவில்களின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

இது தாப்பா சமூகத்தின் ஒற்றுமை, ஒத்துழைப்பின் உணர்வைப் பிரதிபலித்தது.

இந்த சிறிய அளவிலான உதவி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset