நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகா செபூத்தே மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் கேப்கட் வீடியோ தணிக்கை பயிற்சி பட்டறை மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 97 பேர் இந்த பட்டறையில் கலந்துக் கொண்டனர்.

76 பெண்கள் உட்பட 7 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களும் இதில் கலந்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

தற்போதைய இலக்கவியல் காலத்தில் இதுபோன்ற பட்டறைகள் அத்தியாவசியமாக உள்ளது.

ஆக இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது ஆலயம் தொடர்பான விவகாரங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த ஆலய விவகாரத்தில் அதிகமான இந்திய பெண்கள் குரல் கொடுத்தனர்.

குறிப்பாக  ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த பெண்களுக்கு எனது பாராட்டுகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset