செய்திகள் மலேசியா
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள சிறு வியாபாரிகள் தளங்களும் சில வர்த்தக வளாகங்களும் தொடர்பான வாடகை கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கவுள்ளது. இந்தத் தீர்மானம் வரும் ஏப்ரல் 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை அமலுக்கு வரும்.
இந்த முயற்சி கோலாலம்பூரில் DBKL-க்கு சொந்தமான 10,000-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தளங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் பயன் அளிக்கும். இதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு செலவுச் சுமை குறைய உதவும் என்று பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யியோ தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தின் நிலைமாறுதல் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், உலக எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வாடகை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த முயற்சி நகரில் உள்ள சிறு நடுத்தர வியாபாரிகள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு செலவுச் சுமையைக் குறைக்க உதவும்,” என்று அவர் இன்று இங்கு உள்ள பெர்மாய்சுரி வியாபாரிகள் மையத்தில் நடைபெற்ற 50 சதவீத வாடகை குறைப்பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சிறு வியாபாரிகளுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் உதவுவதற்காக இவ்வளவு பெரிய அளவில் முழுமையான வாடகை குறைப்பைச் செயல்படுத்தும் முதல் உள்ளாட்சி அதிகாரிகளில் ஒன்றாக DBKL மாறியுள்ளது.
“இந்த குறைப்பு முழுமையாக 50 சதவீதமாக வழங்கப்படும். இருப்பினும் குறைந்தபட்ச மாத வாடகை RM50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“அதாவது 50 சதவீதம் குறைத்த பிறகும் இறுதியாக செலுத்த வேண்டிய வாடகை மாதத்திற்கு RM50-க்கு குறைவாக இருக்காது,” என்று அவர் கூறினார்.
மாத வாடகை RM50 அல்லது அதற்கு குறைவாக உள்ள இடங்களுக்குப் புதிய குறைப்பு வழங்கப்படாது. அந்த வாடகை முந்தைய அளவிலேயே தொடரும் என்று அவர் விளக்கினார்.
“உதாரணமாக, ஆரம்ப வாடகை RM160 என்றால் 50 சதவீத குறைப்புக்குப் பிறகு அது RM80 ஆகும். ஆரம்ப வாடகை RM80 என்றால் கணக்கில் அது RM40 ஆகும். ஆனால் குறைந்தபட்ச வாடகை RM50 என்பதால் இறுதியாக RM50 தான் வசூலிக்கப்படும்.
“அதேபோல் ஆரம்ப வாடகை RM30 என்றால் அது மாற்றமின்றி RM30 ஆகவே தொடரும்,” என்று அவர் கூறினார்.
இந்த வாடகை குறைப்பு ஊக்கத்தை பெற விரும்பும் வாடகையாளர்கள் முதலில் தங்களிடம் உள்ள அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த நிபந்தனை முக்கியமானது. ஏனெனில் DBKL-க்கு சொந்தமான வியாபாரிகள் தளங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் பலர் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.
“இந்த நடவடிக்கை தற்போதைய வாழ்க்கைச் செலவுச் சுமையைச் சமாளிக்க சிறு வியாபாரிகளுக்கு உதவும் தற்காலிக முயற்சியாகும்.
மேலும் இது மடானி அரசின் கொள்கைகள் சிறு வியாபாரிகளுக்கு நிஜமான நிவாரணத்தை வழங்குகின்றன என்பதை காட்டுகிறது.
“அதே நேரத்தில், இது DBKL நகர மக்களுக்குத் தரமான வசதிகளையும் சேவைகளையும் தொடர்ந்து வழங்கும் திறனைப் பாதிக்காது,” என்று அவர் கூறினார்.
மேலும், கோலாலம்பூர் அனைவரையும் உள்ளடக்கிய, உறுதியான, சமூக நலனைக் கருத்தில் கொள்ளும் நகரமாகத் தொடர வேண்டும் என்பதற்காக வாழ்க்கைச் செலவு நிலைமைகளை DBKL தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
