செய்திகள் மலேசியா
எஹ்சான் குழுமத்தின் ஆதரவில் ஈமான் கட்சியின் சார்பில் நோன்புப் பெரு நாள் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கோம்பாக்:
எஹ்சான் குழுமத்தின் ஆதரவில் ஈமான் கட்சியின் சார்பில் நோன்புப் பெரு நாள் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை கோம்பாக் பேருந்து நிலையத்தின் இரண்டாவது தளத்தி சிறப்பாக நடைபெற்றது.
பினாங்கில் தொடங்கி 7 மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு ஈகைப் பெருநாள் அன்பளிப்பு பொருட்களை வழங்கி வருவதாக ஈமான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ இஸ்மாயில் கூறினார்.
இன்று மட்டும் 250 பேருக்கு, குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள், நோயாளிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. எங்களுக்கு பெரிய உதவியாகவும் பக்க பலமாகவும் எஹ்சான் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் அவர்கள் உள்ளார்கள். அவருக்கும் அவரது நிறுவனத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கறேன் என்று டத்தோ இஸ்மாயில் கூறினார்.
மேலும் 500 பேருக்கு நோன்பு திறப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஹ்சான் குழுமத் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் உரையாற்றும் போது "ஜோகூரில் கிம்மாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் தொடங்கி இன்று ஈமான் கட்சியின் நிகழ்ச்சியோடு நாடு முழுவதும் ஏறக்குறைய 5000 பேருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்குவதில் நாங்கள் உதவி இருக்கிறோம் என்பதில் உள்ளபடியே மகிழ்வடைகிறோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே" என்று கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
