செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப் வாயிலாக 1,000 பேருக்கு ரமலான் உதவிகள்; ஒரு சில சுயநலவாதிகளின் செயலால் மக்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்படக்கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
ஒரு சில சுயநலவாதிகளின் செயலால் மக்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்படக்கூடாது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் வாயிலாக இன்று வசதிக் குறைந்த மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 1,000 பேருக்கு உதவிப் பொருட்களுக்கு வழங்கப்பட்டது.
3 ஆதரவற்ற பிள்ளைகள் காப்பகத்திற்கும் தலா 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
சிறுவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
சமூக கடப்பாட்டின் அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப் இத்திட்டத்திற்காக 130,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இவ்வேளையில் எச்ஆர்டி கோர்ப் இயக்குநர் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல் ஹுரைய்ரா, தலைமை இயக்குநர் டத்தோ முகமத் ஷாமிர் உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
மேலும் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்வது தான் மலேசியாவின் பலம்.
ஆனால் ஒரு சில சுயநலவாதிகள் மக்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
அவர்களின் முயற்சி வெற்றி பெறக்கூடாது.
மக்கள் ஒற்றுமையாக இருப்பது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
