நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாக்டர் மகாதீர் இடுப்பு எலும்பு முறிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்: செயலாளர் அறிக்கை

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது வீட்டில் விழுந்த பிறகு ஏற்பட்ட இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை அல்லாத பிசியோதெரபி சிகிச்சை பெறுவார் என்று அவரது உதவியாளர் இன்று உறுதிப்படுத்தினார்.

மூன்று பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு, தேசிய இதய நிறுவனத்தில் (IJN) டாக்டர் மகாதீரின் உடல்நிலையை ஆய்வுசெய்த பின், இத்தகைய சிகிச்சையே "அவரது மீட்புக்கான சிறந்த வழி" என்று பரிந்துரைத்ததாக உதவியாளர் சூஃபி யூசோஃப் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரின் வயது காரணமாக மறுவாழ்வு செயல்முறைக்கு கணிசமான அளவு நேரம், காலம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் உதவியாளர் சூஃபி மேலும் கூறினார்.

ஜனவரி 6 ஆம் தேதி தி மைன்ஸில் உள்ள அவரது இல்லத்தில் துன் மகாதீர் அதிகாலை நேரத்தில் விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. 

பொதுமக்களின் பிரார்த்தனைகளுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும்  டாக்டர் மகாதிர் முஹம்மது அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 

அவரைக் காண நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset