செய்திகள் மலேசியா
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
கோலாலம்பூர்:
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் மேலும் வலுப்பெற வேண்டும்.
மைக்கியின் மகளிர் தொழில் முனைவோர் பிரிவுத் தலைவர் டாக்டர் ஹேமலா ஏபி சிவம் இதனை கூறினார்.
மைக்கியின் மகளிர் தொழில்முனைவோர் பிரிவு, இந்தியா - மலேசியா இளைஞர் பரிமாற்றம், நிலையான வளர்ச்சிக்கான புரிதல் திட்டத்தின் ஒரு பகுதியாக,
இந்தியாவின் ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவ் கல்லூரியின் பிரதிநிதிகளுடன் ஒரு உரையாடல் அமர்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடாசியஸ் ட்ரீம்ஸ் அறவாரியம், காமன்வெல்த் மாணவர் சங்கம், எம்ஐஒய்சி, ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 35 பேர் அடங்கிய குழு மலேசியாவிற்கு இளைஞர் மேம்பாட்டு முயற்சிகள் தலைமைத்துவம், மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் பற்றி அறிய வந்திருந்தது.
இந்த உரையாடல் அமர்வை தொடங்கி வைத்த டாக்டர் ஹேமலா,
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பெண்கள் தொழில்முனைவோர், தலைமைத்துவம், இளைஞர் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான
ஒத்துழைப்புகளும் வாய்ப்புகளும் வலுப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த அறிவுப் பகிர்வு, கலாச்சார புரிதல், இரு நாடுகளுக்கும் இடையிலான இளைஞர் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளத்தை வழங்கியது.
இந்த அமர்வு மைக்கியின் செயலாளர் தர்ச்சனா எம்.எஸ் பாண்டியனின் இறுதிக் கருத்துக்களுடன் நிறைவடைந்தது.
இதில் எம்ஐஒய்சியின் துணைத் தலைவர் சஞ்சய் கலந்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
காணாமல் போன தஹ்பிஸ் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்
March 11, 2026, 5:02 pm
