நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப்.பெருநாளை முன்னதாகக் கொண்டாடப்படுவதாக பரபரப்பு: முஸ்லிம்களுக்கு கடைசி 10 இரவுகளின் வழிபாடு முக்கியம்

ஷா ஆலம்: 

மாநில முஸ்லிம்களுக்கு, ஹரி ராயா எதிர்பார்த்ததைவிட முன்னதாக கொண்டாடப்படுவதாக ஊகம் பரவியதால் யாரும் பதற வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தின் இறுதி பத்து இரவுகள் முக்கியமானவை. அவற்றில் இரவு நேரத் தொழுகையும் தர்மச் செயல்கள் மேற்கொண்டு கடமை உணர்வை வலுப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 இந்த காலம் முஸ்லிம்களுக்கு மார்க்க வழிபாட்டை அதிகரிக்கும் முக்கிய நேரம் என்றும், இறைவன் மீதான பக்தியை வலுப்படுத்தும் காலமாகவும் கருதப்படுகிறது என்று ஃபலாக் பிரிவின் மூத்த உதவியாளர் முஃப்தி முஹம்மத் ஃபஹ்மி முஹம்மத் சோன் தெரிவித்தார்.

“நாம் அனைவரும் ஷ்வ்வால் பிறையக் காணும் முறையை கண்ணியம் செய்து, ரமளான் 1447 ஹிஜ்ரி தரிசனத்தின் 29ஆம் நாள், மார்ச் 19 வியாழக்கிழமை அன்று அரசர்கள் முத்திரைப் பாதுகாவலர் மூலம் அதிகாரப்பூர்வமாக ஹரி ராயா அறிவிப்பை எதிர்நோக்குவோம்,” என்று ஃபஹ்மி மீடியா சிலாங்கூர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இது தொடர்பாக சிலாங்கூர் முஃப்தி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மக்களுக்கு காத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில், ஈகைப் பெருநாள் முன்னதாகக் கொண்டாடப்பட வாய்ப்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள பரபரப்பான கருத்துக்கள் சிலர் “அதிர்ச்சி ராயா” நிகழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசி வருகின்றனர்.

இந்த விவாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அந்த நாட்டில் பெருநாள் கொண்டாடப்படும் தேதி மார்ச் 20 என்று அறிவித்ததற்குப் பிறகு எழுந்தது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset