நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய மாற்றங்களுடன் பத்துமலை ஆற்றங்கரை பக்தர்களுக்கு தயார் நிலையில் இருக்கும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

தைப்பூசத்தை முன்னிட்டு பல புதிய மாற்றங்களுடன் பத்துமலை ஆற்றங்கரை பக்தர்களுக்கு தயார் நிலையில் இருக்கும்: டான்ஸ்ரீ நடராஜா

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

தைப்பூச விழா அடுத்த மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு விரதமிருந்து தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.

குறிப்பாக தை மாதம் பிறந்ததும் பக்தர்கள் தங்களிம் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்ய தொடங்குவார்கள்.

இதன் அடிப்படையில் ஆற்றங்கரை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தொடங்கி விட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை சேர்ந்த பிரபல குத்தகையாளர் விவேக் தலைமையில் இப்பணிகள் நடைபெறுகிறது.

குறிப்பாக ஆற்றங்கரையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அண்மையில் தீ விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்து பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும் தேவஸ்தானம் இவ்விடத்தை சுத்தம் செய்து பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்

இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். ஆற்றங்கரையை சுற்றி வேலி அமைக்கப்படும்.

அதே வேளையில் ஆற்றங்கரையில் விரைவில் வேல் நிறுவப்படவுள்ளது. 

இதனை தொடர்ந்து ஆற்றங்கரை முறையாக பராமரிக்கப்படும். நேர்த்திக் கடனை பூர்த்தி செய்ய வரும் பக்தர்கள் ஆற்றங்கரையை சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும்.

ஆக பக்தர்கள் பக்தியுடன் இந்த தைப்பூச விழாவை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset