நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவையான பொருட்கள் போதுமான அளவில் உள்ளது: அர்மிசான்

கோலாலம்பூர்: 

மத்திய கிழக்கு மோதல், ஏற்றுமதியைப் பாதிக்கும் என்ற கவலையால் பொதுமக்கள் அவசரமாக பொருட்களை வாங்க தேவையில்லை என கூறப்படுகிறதோடு, முக்கிய தேவையான பொருட்களின் வழங்கல் குறிப்பாக எதிர்கால அயிடில்ஃபித்ரி பண்டிகைக்குப் போதுமானதாக இருக்கிறது.

மோதலால் ஏற்றுமதி நாட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், மாற்று வழங்கல் மூலங்களை அரசு அடையாளம் காணும் என்று உள்துறை வர்த்தகம், வாழ்க்கை செலவு அமைச்சர் அர்மிசான் முஹம்மத் அலி கூறினார்.

“பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம், அவசரமாக பொருட்களை வாங்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன், பண்டிகை பருவத்துக்கான முக்கிய தேவையான பொருட்கள் போதுமான அளவில் உள்ளன” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

 பண்டிகை பருவத்தில் 27 முக்கிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இதில் மஞ்சள் வெங்காயம், சிவப்பு வெங்காயம், சிவப்பு மிளகாய், நீண்ட பயறு, தேங்காய் பால் உட்பட இந்த ஆண்டில் பருப்பு கூட புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset