செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாள்; பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி கூடுதல் விடுமுறை: கல்வியமைச்சு
புத்ராஜெயா -
நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெருநாளை மகிழ்ச்சியான சூழ்நிலையில் கொண்டாடுவதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கும் வகையில் கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்வி சமூகத்தின் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கல்வியமைச்சின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், கெடா, கிளந்தான், திரெங்கானுவை உள்ளடக்கிய குழு ஏ இல் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19 அன்று கூடுதலாக ஒரு நாள் விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா உள்ளடக்கிய குழு பி இல் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 11:07 am
சபாவில் மானிய பெட்ரோல், கடத்தல் சிகரெட் பறிமுதல்
March 11, 2026, 11:06 am
புக்கித் தெரெசெக் ஏற்றத்தில் சிக்கிக் கொண்ட ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள்
March 11, 2026, 10:56 am
சண்டாகானில் துயரம்: மண் சரிவில் சிக்கிய 76 வயது முதியவர் உயிரிழப்பு
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 6:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரஹ்மா STR உதவித் தொகை முன்னதாகத் தருவது அனைவருக்கும் உதவியாக உள்ளது
March 10, 2026, 6:10 pm
போர்ப் பிரதேசத்தில் உள்ள மலேசியர்களை வெளியேற்றும் பணியை அரசு துவங்கியது
March 10, 2026, 6:09 pm
