செய்திகள் மலேசியா
முக்கிய அரசியல் தலைவர் தொடக்கி வைத்த திட்டத்தை நம்பி ஏமார்ந்த மக்களுக்கு பிரதமர் உதவ வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
புத்ராஜெயா:
முக்கிய அரசியல் தலைவர் தொடக்கி வைத்த திட்டத்தை நம்பி ஏமார்ந்த மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உதவ வேண்டும்.
தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் இதனை கேட்டுக் கொண்டார்.
ஒரு நிறுவனத்தின் மோசடித் திட்டத்தை நம்பி கிட்டத்தட்ட 600 பேர் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழந்துள்ளனர்.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் முதலீட்டு திட்டத்தில் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் முதலீட்டு திட்டத்தை முன்னாள் துணை பிரதமர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
துணைப் பிரதமரே தொடக்கி வைக்கும் பட்சத்தில் இந்த முதலீட்டு திட்டம் நியாயமானதாக இருக்கும் என நம்பி அவர்கள் முதலீடு செய்தனர்.
ஆரம்பத்தில் முறையாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் தலைவர் திடீரென இறந்து விட்டார்.
இதனால் இந்நிறுவனத்தில் செயல்பாடுகள் தலைகீழாக மாறிவிட்டது.
குறிப்பாக மக்கள் செய்த முதலீட்டுக்கான பணம் திருப்பி கிடைக்கவில்லை.
பல முயற்சிகளை மேற்கொண்டும் அதில் மக்கள் வெற்றி காண முடியவில்லை.
இதன் அடிப்படையில் தான் தமிழர் முன்னேற்ற கழகத்தின் உதவியுடன் பல முறை போலிஸ் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மக்கள் பல மில்லியன் முதலீடு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மரணமடைகிறார்.
அந்த உரிமையாளரின் மனைவி இந்த முதலீட்டு திட்டத்தில் பங்கேற்ற எந்த ஒரு பணமும் திரும்பி கிடைக்காது என்று கூறி விரட்டுகிறார்.
அதிவேலையில் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கார் ஓட்டுநர் அந்த நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக நான் கருதுகிறேன்.
இதன் அடிப்படையில் தான் பிரதமர் அலுவலகத்தில் இன்று மகஜர் வழங்கப்பட்டது.
மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் பிரதமர் இந்த விவாகரத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென ஸ்ரீ ரமேஷ் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 10:58 pm
தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்
January 9, 2026, 10:56 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 10:33 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராயத் தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:26 pm
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
January 9, 2026, 12:24 pm
