செய்திகள் உலகம்
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
டெஹ்ரான்:
கடந்த டிசம்பர் 28 முதல் ஈரானில் தொடங்கிய அரசு எதிர்ப்பு போராட்டங்கள், தற்போது வன்முறையாக மாறி, நாட்டின் 31 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களுக்கும் ஊர்களுக்கும் பரவியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, நாணய மதிப்பு வீழ்ச்சி, 40 சதவீதத்தைத் தாண்டிய பணவீக்கம் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி பதிலளித்தனர்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் செய்தி நிறுவனம் (HRANA) தகவலின்படி, போராட்டம் 111 நகரங்களுக்கு பரவியுள்ளது.
பார்ஸ் செய்தி நிறுவனம், குறைந்தது 34 போராட்டக்காரர்களும் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம், டெஹ்ரானில் வியாபாரிகள் ரியால் நாணயத்தின் கடும் வீழ்ச்சியை எதிர்த்து தொடங்கியது. பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்ததால், நாடு முழுவதும் பரவியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போராட்டம், 2022-ஆம் ஆண்டு மஹ்சா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின், மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க ஈரான் அரசு, 71 மில்லியன் மக்களுக்கு மாதந்தோறும் 7 அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் மக்களது கோபம் காரணமாக, ஈரான் கடும் அரசியல், சமூக சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்கா ஈரானில் போராட்டங்கள் நடக்க ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலின் விளைவாக பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
ஊழல் வழக்கில் முதல் பெண்மணிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்த சியோல் நீதிமன்றம்
April 28, 2026, 3:59 pm
நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி அல்ல: செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான ட்ரம்ப்
April 28, 2026, 3:06 pm
விளையாட்டு வினையானது: காற்சட்டைக்குள் புகுந்த பாம்பு கடித்ததில் ஜெர்மனி பயணி பலி
April 28, 2026, 3:04 pm
இந்தோனேசியாவை உலுக்கிய 'லிட்டில் அரேஷா' விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது
April 28, 2026, 12:45 pm
