செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனை: 77 வெளிநாட்டவர்கள் கைது
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை (JIM), மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 77 வெளிநாட்டவர்களை (PATI) கைது செய்துள்ளது.
மாநில குடிவரவு துறை இயக்குநர் கென்னித் டான் ஐ கியாங் தெரிவிக்கையில், சிரம்பான் நீலாய் பகுதிகளைச் சுற்றியுள்ள 13 இடங்களில் காலை 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
“இந்த நடவடிக்கையில் 395 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டனர். அதன் விளைவாக, 19 முதல் 47 வயதுக்குட்பட்ட 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் பல்வேறு குடிவரவு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
“கைது செய்யப்பட்டவர்களில் 71 பேர் ஆண்களும், ஆறு பேர் பெண்களும் ஆவர்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள், ஒரு ஆண், பாகிஸ்தானைச் சேர்ந்த 10 ஆண்கள், பங்களாதேஷைச் சேர்ந்த 26 ஆண்கள் உள்ளனர்.
“மேலும் தாய்லாந்தைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஒரு பெண், மியான்மரைச் சேர்ந்த மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், இந்தியாவைச் சேர்ந்த 26 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“நீலாயில் அமைந்துள்ள ஒரு சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் மட்டும் 55 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.
நடவடிக்கையின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும், அனைத்து வெளியேறும் வழிகளும் முற்றுகையிடப்பட்டிருந்ததால் யாரும் தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் புகார்கள் மற்றும் ஒரு வார கால ரகசிய விசாரணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கெனித் கூறினார்.
“கைது செய்யப்பட்ட அனைத்து கைதிகளும் மேலதிக விசாரணைக்காகவும் நடவடிக்கைக்காகவும் நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கேங் குடிவரவு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
“நாட்டில் சட்டவிரோத வெளிநாட்டவர்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தகவல் வழங்க முன்வர வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
“மேலும், வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் எந்தவொரு முதலாளி அல்லது நபர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்,” என அவர் எச்சரித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 11:23 am
48 மணி நேரத்திற்குப் பின் குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட முதிய பெண்
January 9, 2026, 11:18 am
இராணுவ கொள்முதல் வழக்கு: முன்னாள் இராணுவ தளபதி, மனைவிகள் கைது
January 8, 2026, 10:50 pm
கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
January 8, 2026, 10:48 pm
உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது: ஜாஹித்
January 8, 2026, 10:47 pm
ஜாஹித் ஹமிடி மீதான 47 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: ஏஜிசி
January 8, 2026, 1:10 pm
பத்துமலை பொது சொத்து, தனிநபருக்கு சொந்தமானது அல்ல; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: டான்ஸ்ரீ நடராஜா
January 8, 2026, 12:56 pm
