நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எம்எச் 21 விமானம் பாரிஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது: மலேசியா ஏர்லைன்ஸ்

கோலாலம்பூர்:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எம்எச் 21 விமானம் பாரிஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது என மலேசியா ஏர்லைன்ஸ்  உறுதிப்படுத்தியது.

நேற்று பாரிஸின் சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர்பஸ் ஏ350 விமானம் (எம்எச் 21) தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்தது.

இதை தொடர்ந்து அவ்விமானம் பாரிஸின் சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானம் புறப்பட்ட பிறகு திரும்பிச் சென்றது.

இயந்திரக் குறிகாட்டிகளில் அசாதாரணங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தது என்று மலேசிய ஏர்லைன்ஸ் முன்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாற்று விமானம் எம்எச் 21டி இன்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான விமானப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி, விமானக் குழுவினர் முன்னுரிமை கையாளுதலைக் கோரினர் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset