நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மனிதவள அமைச்சகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்களை அறிமுகப்படுத்தும்.

தொடக்கமாக, தீபகற்ப மலேசியாவில் மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் நிறுவப்படும்.

இது அனைவருக்கும் செயல்முறையை எளிதாக்கும் ஒரு முயற்சியாகும்.

எனவே மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக தொழிலாளர் நீதிமன்றம் அவர்களிடம் வரும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தீபகற்ப மலேசியாவில் மூன்று அலகுகளை உள்ளடக்கிய 5 மில்லியன் ரிங்கிட்டை  நாங்கள் ஒதுக்கியுள்ளோம் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக டத்தோஸ்ரீ ரமணன் தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை சிறப்பு வருகை மேற்கொண்டார். இத்துறை குறித்து முழு விளக்கத்தையும் அவர் பெற்றார்.

தொழிலாளர் நீதி சேவைகளை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு அரசாங்க முயற்சியாக நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம் உள்ளது.

2026 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி நடமாடும் நீதிமன்ற சேவைகளை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, பிள்ளைகளுக்கு ஏற்ற சாட்சி அறைகள், முழுமையாக பொருத்தப்பட்ட நீதிமன்ற அறை வசதிகள் உள்ளிட்ட வாகனங்கள் நடமாடும் நீதிமன்ற அறைகளாக மாற்றப்படுகின்றன என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset