நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே

கோலாலம்பூர்:

அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்து விட்டது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ அக்மால் சாலே சூசகமாக கூறியுள்ளார்.

எனது அரசியல் போராட்டத்தில் தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் போராட்டங்களும் செயல்படுத்தப்பட்ட பிறகு பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதே நேரத்தில் அடித்தள மக்களின் குரல்களை ஆதரிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக அவர் கூறினார்.

புதன்கிழமை தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் இந்த அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் அக்மால், 

கட்சி உறுப்பினர்களின் கருத்துகள், கவலைகள் முடிந்தவரை சிறப்பாக தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset