நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்

கோலாலம்பூர்:

என் தந்தை துன் மகாதீருக்கு வயது காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமரின் மகனான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் இதனை கூறினார்.

வீடடில் தவறி விழுந்ததால் துன் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது.

இந்நிலையில் வயது முதிர்ச்சி காரணமாக இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஐஜேஎன், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து நிபுணர் ஆலோசனை பெறப்பட்டது.

தற்போது மகாதீர் இயல்பான மீட்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடல்நிலையைப் பொறுத்தவரை, இதற்கு சிறிது காலம் ஆகலாம். ஒருவேளை இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஓய்வும் தேவைப்படலாம்.

அவரது வயது 100 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அறுவை சிகிச்சை ஒரு நல்ல வழி அல்ல என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு காணொலியில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset