செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
கிள்ளான்:
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டதாகும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் நம்பிக்கை கூட்டணியுடன் தேசிய முன்னணி ஒத்துழைப்பை தொடரும் என்ற உறுதிப்பாட்டை டத்தோஸ்ரீ ஜாஹித் கொண்டுள்ளார்.
அவரது இந்த கொள்கை ரீதியான தலைமைத்துவம், உறுதிப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முடிவு துல்லியமானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் படகை அசைக்கக் கூடாது என்ற கொள்கை தொடர்ச்சி, பொருளாதார மீட்சி, முதலீட்டாளர் நம்பிக்கை, மக்களின் நலனை தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு அரசியல் நிலைத்தன்மையின் ஒரு முக்கியமான அடித்தளமாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோருக்கு இடையேயான வலுவான தலைமைத்துவ கூட்டாண்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அவர்கள் தங்கள் இணக்கத்தன்மை, முதிர்ச்சி, நாட்டின் நிர்வாகத்தை திறம்பட ஒருங்கிணைக்கும் திறனை நிரூபித்துள்ளனர்.
மேலும் இந்த தலைமைத்துவம் நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது.
குறிப்பாக வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.
மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது.
பொருளாதாரம், அன்றாட வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் நிச்சயமற்ற தன்மையை மக்கள் மீண்டும் ஒருமுறை தாங்கிக் கொள்ளக்கூடாது.
எனவே நிலைத் தன்மையை பேணுதல், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துதல் நாட்டின் மீட்சி, செழிப்பில் கவனம் செலுத்துவது தொடர்ந்து முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2026, 1:10 pm
பத்துமலை பொது சொத்து, தனிநபருக்கு சொந்தமானது அல்ல; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: டான்ஸ்ரீ நடராஜா
January 8, 2026, 12:56 pm
மலேசியா பொது போக்குவரத்தில் புதிய எழுச்சி: பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
January 8, 2026, 11:48 am
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனை: 77 வெளிநாட்டவர்கள் கைது
January 8, 2026, 11:26 am
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எம்எச் 21 விமானம் பாரிஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது: மலேசியா ஏர்லைன்ஸ்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
