செய்திகள் மலேசியா
50 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும்; பிரதமரின் புத்தாண்டு உரை வரவேற்கத்தக்கது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
கூடுதலான 50 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளை நிச்சயம் மேம்படுத்தும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புத்தாண்டு உரை வரவேற்கத்தக்கது.
இது பொது நலன், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் தெளிவாக நிரூபிக்கிறது.
பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு உறுதியான நன்மைகளாக மாற வேண்டும்.
இதற்கு நல்வாழ்வு, நியாயம், நீண்டகால நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட கொள்கைகள் இருக்க வேண்டும் என பிரதமரின் உரை வலியுறுத்தியது.
மேலும் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு பிரதமர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு என 50 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிதி நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து சீனப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இ-ஹெய்லிங் கிக் தொழிலாளர்களுக்கு பயிற்சி, சமூகப் பாதுகாப்பை வழங்க திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் மூலம் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி தினசரி தொழிலாளர் இயக்கத்தை ஆதரிக்கும்.
அதே வேளையில் மலேசியாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கணிசமாக பங்களிக்கும் கிக் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறது.
இந்த நிதியை விநியோகிப்பதற்கான வழிமுறை இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும்.
சிபி500 தவணை உத்தரவின் கீழ் அரசு ஊழியர்கள் தற்காலிக நிவாரணம் பெறுவார்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமர் அன்வார்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
