நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பந்திங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது: போலிஸ்

கோல லங்காட்:

பந்திங்கில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோல லங்காட்  போலிஸ் தலைவர் முகமட் அக்மால் ரிசால் ரட்ஸி இதனை தெரிவித்தார்.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 999 மூலம் இந்த சம்பவம் குறித்து போலிஸ்க்கு தகவல் கிடைத்தது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவல் உள்ள பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது 03-31872222 என்ற எண்ணில் கோல லங்காட் போலிஸ் செயல்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, நேற்று இரவு பந்திங்கில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபர் இன்னும் போலிசாரால் தேடப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset