செய்திகள் மலேசியா
சீர்திருத்தம் என்பது நமது ஆணையாகும்; இந்தப் போராட்டம் முடிவடையவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
உலு சிலாங்கூர்:
சீர்திருத்தம் என்பது நமது ஆணையாகும். ஆக இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
மனிதவள அமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மலேசிய ஓத்தாய் சீர்திருத்த நல அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.
கடந்த 1998 முதல் போராட்டத்திற்கு விசுவாசமாக இருக்கும் ஓத்தாய் சீர்திருத்தத்தின் குடும்பத்தைக் கொண்டாட, எனது கட்சித் தலைமை நண்பர்களுடன், பிரதமரும், கெஅடிலாம் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் வருகை தந்தார்.
சீர்திருத்தப் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழும் இவர்கள், அழுத்தம் கொடுக்கப்படும்போது ஒருபோதும் தடுமாறாதவர்கள், சோதிக்கப்படும்போது பின்வாங்காதவர்கள், நீதி, ஜனநாயகக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
அவர்களின் உறுதிப்பாடும் தியாகமும் இல்லாமல், இன்று நாம் இந்த நிலையில் இருக்க முடியாது.
நீதியின் அடிமட்ட மக்களின் பங்களிப்புகள் மற்றும் சேவைகளை, குறிப்பாக 1998 ஓத்தாய் சீர்திருத்தவாதிகளின் பங்களிப்புகள், சேவைகளை, வரலாற்றின் மடிப்புகளிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியாது.
இன்று நாம் ஆதரிக்கும் மதனி அரசாங்கத்தை உருவாக்க வழி வகுத்தவர்கள் அவர்கள்தான்.
தற்போது ஆணையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு கெஅடிலான் தலைவரும் ஓத்தாய் சீர்திருத்தவாதிகளின் சேவைகளையும் தியாகங்களையும் வார்த்தைகளில் மட்டுமல்ல, கொள்கைகள், செயல்கள், மக்களிடம் கொண்டு வேண்டும் என்ற பிரதமரின் கூற்றுடன் நான் உறுதியாக உடன்படுகிறேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 12:01 pm
தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனைக்கு தடை: பாப்பாராயுடு
January 5, 2026, 11:49 am
ஸ்டீவன் சிம்மின் உதவிக்குப் பிறகு ஹில்மி இப்போது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்
January 5, 2026, 11:26 am
மதுரோவை அமெரிக்க விடுவிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
January 5, 2026, 10:43 am
இரவு உணவு இறுதி உணவாக மாறியது: உணவகத்தில் துப்பாக்கிச்சூடு
January 5, 2026, 8:35 am
பிரதமர் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
January 4, 2026, 3:55 pm
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது: டான்ஸ்ரீ நடராஜா
January 4, 2026, 3:53 pm
இரத்த தானம் மூலமாக பல உயிர்களை காப்பாற்ற முடியும்: சிவக்குமார்
January 4, 2026, 3:52 pm
மாணவர்களுக்கான கல்வி உதவி நிதிக்காக அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: வோங்
January 4, 2026, 3:51 pm
