நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரையின் மகத்துவத்தை பாத்தேக் ஏர் மதிக்கிறது: டத்தோ சந்திரன்

சிப்பாங்:

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரையின் மகத்துவத்தை பாத்தேக் ஏர் மதிக்கிறது.

பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ சந்திரன் ராமமுத்தி இதனை கூறினார்.

48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.

அப்படி செல்லும் பகதர்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கும் நடைமுறை கடந்தாண்டு அமலுக்கு வந்தது.

இதன் அடிப்படையில் பாத்தேக் ஏர் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய சலுகைகளையும் வசதிகளையும் செய்து வருகின்றது.

இந்த முயற்சி கேஎல்ஐஏவில் ஒரு பிரத்யேக வழியனுப்புதலை ஏற்பாடு செய்தல், பக்தர்கள் தங்கள் ஆன்மீக பயணத்தைத் தொடங்கும்போது அவர்களுக்கு சுமூகமான, மரியாதைக்குரிய புறப்பாட்டை உறுதி செய்வதற்கான பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

பாத்தேக் ஏர் விமான நிறுவனம் யாத்திரையின் முக்கியத்துவத்தையும் அத்தகைய பயணங்களை எளிதாக்குவதில் வரும் பொறுப்பையும் மதிக்கிறது.
ஐயப்பன் சுவாமி யாத்திரை பக்தர்களுக்கு ஆழமான ஆன்மீக அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

மேலும் அவர்களின் பயணம் கண்ணியம், கவனிப்பு, மரியாதையை பிரதிபலிக்கும் வகையில் தொடங்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.

பயணிகளை விமானம் ஏற்றிச் செல்வதைத் தாண்டி, அவர்களின் நோக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறது.

மேலும் அவர்கள் கவனத்துடன் கையாளப்படுவதை உறுதி செய்கிறது என்று டத்தோ சந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset