செய்திகள் மலேசியா
முஹைதீன் யாசின், அஸ்மின் இல்லாத PN – மலாய் அல்லாத மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது கடினம்
பினாங்கு:
பெரிக்காதான் நேஷனல் (PN) கூட்டணியில் இருந்து முஹைதீன் யாசின், அஸ்மின் அலியின் விலகலைத் தொடர்ந்து, எதிர்வரும் தேர்தல்களில் மலாய் அல்லாத மக்களின் ஆதரவை PN தக்கவைத்துக் கொள்ளுவது கடினமாக இருக்கலாம் என்று உரிமை அமைப்பின் தலைவர் பி. ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒற்றை இனப் படிமத்துடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படும் பெர்சாத்து (Bersatu) கட்சி, PN, மலாய் அல்லாத வாக்காளர்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டது என அவர் மேலும் கூறினார்.
“இப்போது இந்த இரண்டு தலைவர்களும் PN-ஐ விட்டு விலகியதால், (அந்த கூட்டணி) மலாய் அல்லாத வாக்காளர்களுடன் உள்ள தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள சிரமங்களை எதிர்கொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முஹ்யிதீன் நாளை முதல் PN தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அஸ்மின் PN பொதுச் செயலாளர் பதவி, சிலாங்கூர் PN தலைவர் பதவி ஆகியவற்றைக் கைவிடுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, மலேசிய இஸ்லாம் கட்சியின் (PAS) பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன், கூட்டணியின் அமைப்பை வலுப்படுத்த PN-ஐ வழிநடத்த தயாராக இருப்பதாகவும், மாநிலத் தேர்தல்கள் (PRN), PRU16-க்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 3:27 pm
