நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் விலகல்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் விலகியுள்ளார்.

டான்ஸ்ரீ மொஹைதினின் விலகலை  பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி,   தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் உறுதி செய்தனர்.

முன்னாள் பிரதமரான அவர் நேற்று இரவு கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களின் வாட்சாப் குழுவில்  இந்த விஷயத்தைப் பற்றித் தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஆம்... டான்ஸ்ரீ நேற்று இரவு இந்த விஷயத்தைப் பற்றித் தெரிவித்தார் துன் பைசால் சுருக்கமாகக் கூறினார்.

இதனிடையே கட்சியின் உள் வட்டாரத்தில் ஒருவர்,

மொஹைதின் தேசியக் கூட்டணி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை இறுதி செய்துவிட்டதாக அறிவித்ததாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மொஹைதின் நோக்கத்தை சில உச்சமன்ற உறுப்பினர்கள் எதிர்த்ததாகவும், அவர்கள் மொஹைதினிடம் தனது முடிவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset