நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்கள் இனி டை அணிவது கட்டாயமில்லை: கல்வி அமைச்சகம்

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டிலிருந்து பள்ளி மாணவர்கள் டை அணிவது கட்டாயமில்லை என மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) அறிவித்துள்ளது.

இந்த முடிவு, கடந்த டிசம்பர் 8 அன்று நடைபெற்ற 2025 மலேசிய கல்வி அமைச்சக சிறப்பு தொழில்முறை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், டிசம்பர் 17 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில், பள்ளிகளில் டை அணிவது தொடர்பாக மாணவர்களுக்கு எந்தவித கட்டாயமோ அல்லது அழுத்தமோ தரக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, கல்வி இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஹம்மத் அசாம் அஹமது அவர்களால் கையொப்பமிடப்பட்டதாகும்.

புதிய கல்வியாண்டு தொடங்கும் முன்னர், குழந்தைகளுக்கான பள்ளி உபகரணங்களை வழங்குவது பெற்றோரின் பொறுப்பு என்பதை கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளதுடன், அந்தச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

“மாணவர்களின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு, பெற்றோரின் நிதிச் சுமையை தணிக்கும் வகையில் கல்வி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது,” என அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவை எடுக்க முக்கிய காரணங்களாக, மலேசியாவின் வெப்பமும் ஈரப்பதமும் அதிகமான காலநிலை, தினசரி டை அணிவதற்கு ஏற்றதல்ல என்பதும், அது மாணவர்களின் வசதியையும் கவனத்தையும் பாதிக்கக்கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset