நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: சிலாங்கூர்  சுல்தான் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து 

ஷா ஆலம்: 

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுத்தீன் இட்ரிஸ் ஷா  சிலாங்கூர் சுல்தானா தெங்கு பெர்மைசூரி தெங்கு பெர்மைசூரி நோரஷிகின் அவர்கள், சிலாங்கூரில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும்  கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சிலாங்கூர் அரச மாளிகையின் அதிகாரப்பூர்வ முகநூல்  பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், கிறிஸ்து பிறந்த திருநாளை மகிழ்ச்சி, வளமை  ஒற்றுமையுடன்  குடும்பத்தினருடனும் சுற்றியுள்ள சமூகத்தினருடனும் கொண்டாடி மகிழுங்கள். நம் கொண்டாட்டம் மகிழ்ச்சி, ஒற்றுமை கலந்த நன்றியுணர்வுடன் அதனைக் கொண்டாட வேண்டும் என சுல்தான் ஷராபுத்தீன் கூறினார்.

மேலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மூலம் வெளிப்படும் அன்பும்  மரியாதையும், நாட்டின் பன்முக சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என அவர்  தெரிவித்தார்.

- கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset